தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடை பெற்று வருகிறது. நேற்று நடந்த சந்தையில் ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்க, வாங்க வியாபாரிகள் வந்திருந்த னர். 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள கொண்டு வந்தனர். ஒரு ஆடு 4, 500 முதல் 8, 500 வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 25லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.