விளைநிலங்களில் கலக்கும் சாயக் கழிவு.. பயிர்கள் நாசம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விளைநிலங்களில் புகுந்த சாயக் கழிவுநீரால், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி நாசமாகின. விளைநிலங்களுக்கு வரும் ஏரி நீரில், அருகில் உள்ள சாய ஆலையில் இருந்து வெளியேறு சிவப்பு வண்ண கழிவுகள் விளைநிலங்களை சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விளைநிலங்களுக்கு அருகே ஏராளமான சாய ஆலைக் கழிவுகள் இருப்பதாகவும், அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி: NewsTamilTV24x7