மதுரை மாவட்டம் தபால் தந்தி நகர் தனியார் பள்ளி அருகே, பெண் ஒருவர் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், செய்வதறியாமல் அதிர்ச்சியில் நின்றார். இதுகுறித்த கண்காணிப்புக் காட்சியை வைத்து போலீசார் தற்போது அந்நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.