கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டி மீது சிக்னல் கம்பத்தில் உயரமாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்த விளம்பர பேனர் அறுந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெயிலால் பேனர்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் கம்பிகள் துருபிடிப்பதால் இதுபோன்ற விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆபத்தை விளைவிக்கும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.