தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக நடிகை கஸ்தூரி பேசியிருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தது. இது தொடர்பான வழக்கில், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (நவ 20) கஸ்தூரியின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.