ஜம்மு- காஷ்மீரின் கேரன் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு அருகே கிஷன்கங்கா ஆற்றங்கரை மற்றும் ஜீலம் நதிக்கரைக்கு குறுக்கே அமைந்துள்ள தபால் நிலையம் தான் இந்தியாவின் முதல் தபால் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்கோடு 193224. இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்த தபால் நிலையம் செயல்பட்டுவருகிறது. தற்போது இந்த தபால் நிலையத்தில் ஒரு தபால் அதிகாரி மற்றும் 3 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.