தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை கொலை சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டார். அதில், “அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம். இந்த அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனியாவது கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.