
தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை நிறுத்திவைத்த ஆளுநரின் செயல் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ.பி பார்திவாலா அமர்வு வழங்கிய தீர்ப்பு பின்வருமாறு., "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் 10 மசோதாவை அனுப்பியது சட்டவிரோதம். ஆளுநரின் செயல்பாடுகளில் நேர்மை இல்லை" என நீதிபதிகள் கூறியுள்ளனர்.