சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி, பனைமடல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி செல்லத்திற்கு ஐந்தாவது குழந்தை பிறந்த பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நிலை மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார்.