தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி (26) என்பவரை, மதன் (30) என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். இதுகுறித்து அதிமுக மாஜி அமைச்ச்ர ஜெயக்குமார் கூறுகையில், “தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள். தந்தையும்-மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டியிருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழுமா?. இதுகுறித்து பேச Unfit அமைச்சர் அன்பில் மகேஷை அனுப்பினால் ஆசிரியரின் உயிர் திரும்பி வந்து விடுமா?” என குற்றம்சாட்டினார்.