தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி மற்றும் கைதான மதன் குமார் இருவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று (நவ 19) மாலை அவர் ரமணியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ரமணியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் இன்று (நவ 20) பள்ளிக்குள் நுழைந்து கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.