ஒரே ஊரில் 100 சவரன் நகை திருட்டு.. பீதியில் மக்கள்

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கருவியப்பட்டி கிராமத்தில் 100 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாக குழு தலைவராக உள்ள சேதுராமன் என்பவர் வீட்டில் வைத்திருந்த கோயில் நகைகள் மற்றும் அவரது வீட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். மேலும், அவரது வீட்டின் அருகே உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி