கோவை கணபதி பகுதியில் கடந்த 16ம் தேதி துக்க வீட்டில் சடலம் வைக்கப்பட்ட ப்ரீசர் பாக்ஸுக்கு மின் இணைப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன் (50) என்பவரும் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். 30% தீக்காயங்களுடன் ஸ்ரீராம் (20) என்பவர் சிகிச்சையில் உள்ளார்.