தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுகவின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் அவர் கட்டமாக தெரிவித்துள்ளார்.