சேலத்தைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் மகதீர் மகமுத் (35) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நவ.18 மாலை ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின் மகதீர் மகமுத் அங்குள்ள குளியல் அறையில் மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில், அவர் உயிரிழக்கும் முன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.