தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள் உலகின் 2-வது மிகப்பெரிய சதுப்புநிலக்காடாகும். 1,100 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ள இந்த காடுகளில் 400 நீர்வழித்தடங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிச்சாவரம் சதுப்புநில காடுகளைச் சுற்றி சுமார் 50 தீவுகள் உள்ளன. இங்கு பல அரிய வகை பறவைகளும் விலங்குகளும், தாவரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக பனிக்காலத்தில் இடம்பெயர் பறவைகள் பலவும் இங்கு தஞ்சமடைகின்றன.