சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து "கிங் ஆஃப் க்ளே" என்றழைக்கப்படும் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார். டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸ் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில், நடால் தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். அதன்பின், நடால் தனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தபோது, "ரஃபா, ரஃபா" என்ற கோஷங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்தன. நடால், 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.