சிதம்பரம்: மாணவி பாலியல் பலாத்காரம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன். இவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், மாணவியை, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.