பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக இளஞ்சிவப்பு (PINK) நிற ஆட்டோக்கள், சென்னையில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணையை, தமிழ்நாடு அரசு இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளது. முதற்கட்டமாக, தலைநகர் சென்னையில் 250 பிங்க் நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், ஓட்டுநராக விரும்பும் பெண்களுக்கு, ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.