பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

73பார்த்தது
பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் புவனகிரி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லூர் உள்ளிட்ட ஏழு ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 680 அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில் முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி