சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு. முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.