இஸ்ரேலில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகளில் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் இருந்து 4 பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பியனுப்பியதை அடுத்து இஸ்ரேலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டைமர்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், வெடிக்காத குண்டுகளை நிபுணர் குழு செயலிழக்கச் செய்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.