உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், சிறுவன் ஒருவன் லிஃப்ட் உள்ளே நின்றுள்ளான். அப்போது ஒரு பெண் தனது வளர்ப்பு நாயுடன் லிஃப்ட் உள்ளே செல்ல முயன்றுள்ளார். நாயைப் பார்த்து பயந்த அந்த சிறுவன், நாயை லிஃப்ட்டிற்கு உள்ளே அழைத்து வரவேண்டாம் என அப்பெண்ணிடம் கெஞ்சியுள்ளான். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், சிறுவனை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வைரலான நிலையில், அப்பெண் கைது செய்யப்பட்டார்.