திமுக அரசை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும்” என குறிப்பிட்டு, #GetOutStalin என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். முன்னதாக இன்று காலை 6 மணிக்கு இந்த ஹாஸ் டேகை பதிவிடுவேன் என நேற்று கூறியிருந்தார்.