இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவால் அக்சர் பட்டேலின் ஹாட்ரிக் கைநழுவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், 9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அவரது சுழல் பந்துவீச்சில் சிக்கிய வங்கதேச பேட்டர்கள் தன்ஜித் ஹசன் மற்றும் முஸ்பீஹிர் ரகீம் அடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய ஜாகீர் அலி அக்சரின் ஹாட்ரிக் பந்தை தடுத்து ஆட முயன்ற போது, பந்து எட்ஜ் ஆகி ரோகித்திடம் சென்றது. ஆனால், அந்த சுலபமான கேட்சை அவர் தகறவிட்டார்.