கேரள மாநிலம் கோட்டயம் அருகே இயங்கி வரும் தனியார் பாரில், வாடிக்கையாளர் மீது, உழியர் கண்ணாடி கப்புகளை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாருக்கு இருவர் மது அருந்த சென்றுள்ளனர். அங்கு மதுவை அருந்திவிட்டு, போதையில் நேராக ஊழியரிடம் சென்ற இருவரில் ஒருவர், தான் கொடுத்த பணத்திற்கு, மது கொஞ்சமாக தான் கொடுக்கப்பட்டது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊழியர், அங்கிருந்த கண்ணாடி கப்புகளை எடுத்து அவர் மீது எறிந்துள்ளார்.