ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி, இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், 5 விக்கெட் வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 5W எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்காக 59 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஜாகீர் கான். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளிய முகமது ஷமி, 60 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.