இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்க மாநிலம் துர்காபூர் விரைவு சாலையில் விபத்துக்குள்ளானது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கங்குலியின் கான்வாய் 2 வாகனங்கள் சேதமடைந்தன. பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கங்குலி கலந்து கொண்டார். சவுரவ் கங்குலி பாதுகாப்பாக உள்ளார்.