திருவள்ளூர்: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தின்னர் தயாரிக்கும் ஆலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் அருகில் இருந்த பள்ளியில் அந்த தீ தற்போது பரவத் தொடங்கியுள்ளது. உடனடியாக அங்கிருந்த மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின. தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.