கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவருக்கு பணி நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு மதுரை சென்று வர அவர் முடிவு செய்தார். இந்த சூழலில் செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற போது அவர் கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.