தீபாவளி ஸ்வீட் காம்போ.. ஆஃபர் அறிவித்த ஆவின்
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்பனையாகிறது. நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.500க்கும், காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250கி காம்போ ரூ.900க்கும் விற்பனையாகிறது.