கிணத்துக்கடவு: வாழைத்தார் வரத்து அதிகரிப்பு!

54பார்த்தது
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார் உடனுக்குடன் விற்பனையாவதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 70 ரூபாய், நேந்திரன் - 25, கதளி - 35, பூவன் - 35, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை - 42 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த வாரத்தை விட, செவ்வாழை - 5, கதளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. சாம்பிராணி வகை மட்டும் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் இது பற்றி கூறும்போது, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் நாளை மற்றும் நாளை மறுநாள், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி