கோவையில் அஞ்சல் தினத்தை பறைசாற்றும் விதமாக இன்ஸ்டாகாலத்திலும் கடிதம் எழுதி பரிமாறிய குழந்தைகளின் நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காளப்பட்டி விளாங்குறிச்சி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி கரகாட்டக்காரன் அஞ்சலை மற்றும் நாணய கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த நாணய கண்காட்சியினை கோவை கோட்ட தபால் கண்காணிப்பாளர் சிவசங்கரன் துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் 1800 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை உள்ள நாணயங்கள் இப்போது பயன்படுத்தப்பட்ட தபால் தலைகள் கடிதங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. தகவல் பரிமாற்றம் நவீன மயமாகிய இந்த சூழலில் அப்போதய காலகட்டத்தில் தகவல் பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய முறையான கடிதமாற்றும் முறையை 2கே கிட்ஸ்களும் அறிந்து கொள்ளும் வகையில் கடிதங்களை குழந்தைகள் எழுதி சக மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து பேசிய பள்ளி குழந்தைகள் தனது பெற்றோர் காலத்து நாணயங்களை பார்த்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது இதுபோன்று பார்த்ததில்லை எனவும் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.