கோவை: தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க அழைப்பு

85பார்த்தது
கோவை: தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க அழைப்பு
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். கோவை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் (1) சீனிவாசகம் நேற்று (அக்.,10) வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பித்துக் கொள்ள வரும் 31ம் தேதி கடைசி நாள். எனவே, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள், http: //dish. tn. gov. in என்ற இணையதள முகவரிக்குள் சென்று, உரிய உரிமைத் தொகைய ஆன்லைன் வாயிலாக செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி