தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அறிவித்துள்ளது.