ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம்

68பார்த்தது
திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், ஓட்டுநர் ரீல்ஸ் வீடியோ பார்த்தபடி பேருந்தை ஓட்டியுள்ளார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வரும் ஓட்டுநர் கோயம்பேடு பணிமனையைச் சார்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்தீபன் என்பது தெரியவந்தது. தவறு செய்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி