தமிழ் சினிமாவில் ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பயணம்’, ‘வெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தெலுங்கு இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையை நாசம் செய்ததாக பதிவிட்டுள்ளார். இந்த கொடூரமான இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பஞ்சாபி நடிகைக்கு உதவி செய்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் பெயரை தெரிவிக்கவில்லை.