தொண்டாமுத்தூர் - Thondamuthur

மாதம்பட்டி: சாலையில் தொடர் விபத்து - இருவர் காயம்

மாதம்பட்டி: சாலையில் தொடர் விபத்து - இருவர் காயம்

கோவை, மாதம்பட்டி சிறுவாணி பிரதான சாலையில் நேற்று நடந்த தொடர் விபத்தில் சுற்றுலா பயணி உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். ஒடிசாவைச் சேர்ந்த 26 வயது பிரத்யூஸ் குமார் பத்ரா தனது நண்பர்களுடன் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று காலை மாதம்பட்டி பகுதியில் வாடகை காரில் சிறுவாணி சாலையில் கிழக்கு நோக்கி சென்றபோது கார் திடீரென நடுரோட்டில் நின்றது. அப்போது பூண்டி வழித்தடத்தில் இருந்து அதிவேகமாக வந்த அரசு பேருந்து பிரத்யூஸின் கார் மீது மோதியது. நிற்காமல் சென்ற பேருந்து எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. லாரி பின்னால் வந்த கார் ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரியை ஓட்டி வந்த தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (25) காலில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் கார்த்திக்கு (38) காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர் விபத்தால் சிறுவாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். காயமடைந்த இசக்கியப்பன் மற்றும் கார் ஓட்டுநர் பிரத்யூஸ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా