கோவை: ரயில் ஓடுபாதை அருகே மின்கம்பத்தில் தீ!

61பார்த்தது
கோவை, போத்தனூர், நஞ்சுண்டாபுரம் சாலையில் ரயில் ஓடுபாதை அருகே உள்ள குப்பையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகில் இருந்த மின் கம்பத்திலும் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ரயில் பாதை அருகே உள்ள மின் கம்பத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :