கோவை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
கோவை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இந்திய ஐக்கிய விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்த பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்தும், மத்திய அரசு அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 

எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடையில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி