கோவை; ஆலமரத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

76பார்த்தது
கோவை; ஆலமரத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரின் பின்புறமுள்ள ஒரு கிணற்றின் அருகே பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் நேற்று ஆண் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கடைவீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்த்துக்கு சென்று சடலத்தை மீட்டு சோதனை செய்தனர். அப்போது அவரது சட்டைப்பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில், செல்போன் எண் ஒன்றை எழுதியிருந்தார். அந்த நம்பருக்கு போலீசார் போன் போட்டு விசாரித்தனர். 

அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் கோவையில் தங்கி வேலை பார்க்கும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜீவ்காந்தி(40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? குடும்ப பிரச்னையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி