கோவை: மரம் முறிந்த விபத்து- உயிர் சேதம் தவிர்ப்பு!

75பார்த்தது
கோவை, சிங்காநல்லூர், நஞ்சப்பா நகரில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. மின் கம்பம் சேதம் அடைந்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதே நேரத்தில் அந்த வழியாக காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக வரவில்லை. இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அதிர்ச்சியில் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி