கோவை ரயில்வே போலீசார் நேற்று திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பையில் 6 ½ கிலோ கஞ்சா இருந்தது. இதேபோல், கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது. மொத்தம் 9 ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.