கோவை: மாணவர் அடித்த துன்புறுத்தல் - நிர்வாகம் விளக்கம்!

75பார்த்தது
கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடுமைப்படுத்தும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் ராக்கிங் அல்ல என்றும், முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர் தங்கி இருந்த அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு சீனியர் PG மாணவர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர் ஆகியோரை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் இன்று (24. 03. 2025) விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி