கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பலா மரங்கள் மற்றும் முருங்கை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தில் தற்போது எந்த பயிர்களும் பயிரிடப்படாத நிலையில், நேற்று உணவு தேடி வந்த யானைகள் பலா மரங்களின் கிளைகளை உடைத்து, அங்கிருந்த பலாப் பழங்களை தின்று சேதப்படுத்தியுள்ளன.
இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.