கோவை: குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்

73பார்த்தது
கோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி, வாரிசு சான்றிதழ் கோரி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக அவர் மத்வராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை சந்தித்து சான்றிதழ் குறித்து விசாரித்தார். அப்போது, கிராம நிர்வாக அதிகாரி ரூ. 5, 000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறினார்.
இதையடுத்து, கிருஷ்ணசாமி தனது உறவினர் மூலம் முதற்கட்டமாக ரூ. 1, 000 கொடுத்தார். மீதித் தொகையை பின்னர் தருவதாக தெரிவித்தார். இதற்கிடையில், லஞ்சம் கேட்டது தொடர்பாக கிருஷ்ணசாமி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா, ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் வழங்கினர். வெற்றிவேல், கிருஷ்ணசாமியிடம் புட்டுவிக்கி சாலையில் வந்து பணத்தை தரும்படி கூறினார். அங்கு சென்ற கிருஷ்ணசாமி, ரூ. 3, 500 லஞ்சப் பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அவர்களிடம் இருந்து தப்பி, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். பின்னர் துரத்தி பிடித்து குளத்திலிருந்து போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர். டி. ஓ நேற்று உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி