கோவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (மார்ச் 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.