கோவை: குப்பை டெண்டரில் ஊழல் - கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு!

85பார்த்தது
கோவை மாநகராட்சி கூட்டத்தில் குப்பை அகற்றும் பணிக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இது தொடர்பாக வெளிநடப்பு செய்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி வரலாற்றிலேயே இது முக்கியமான நாள். இதுபோன்ற கூட்டத்தை எந்த மாநகராட்சியும் நடத்தி இருக்காது. காலையில் ஒரு கூட்டம், அதிக வேலையில் பட்ஜெட், இதுபோன்று எங்காவது நடக்குமா? அப்படி ஒரு அநியாயத்தை கோவை மாநகராட்சி செய்து கொண்டு இருக்கிறது.
இந்த சாதாரண கூட்டத்தில், 132 சப்ஜெக்ட்கள் விவாதிக்கப்படுகிறது. 54 சப்ஜெக்ட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது. நேற்று இரவு 82 சப்ஜெக்ட்டை கொடுக்கிறார்கள். எப்படி படித்து புரிந்து கொள்ள முடியும்? மாமன்ற உறுப்பினர்கள் அதற்கு உள்ளாக எப்படி அதை படித்து புரிந்து கொள்ள முடியும். அதேபோல குப்பை டெண்டர் விடப்பட்டதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி