பஸ் நிலையத்தில் செல்போன் திருடன்; மடக்கி பிடித்த பயணிகள்
கோவை காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறைக்கு நேற்று (அக்.,1) டவுன் பஸ் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். மதுரையை சேர்ந்த ரஞ்சித் (29) என்பவர் அவரது நண்பர் மலைச்சாமி என்பவருடன் கட்டிட வேலைக்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வெளியே வரும் போது ரஞ்சித்தின் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவரது அருகில் இருந்த வாலிபர் திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போனை திருடியது நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜா (37) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.