ஆனைமலை, நல்லாறு திட்டத்தை அரசு கிடப்பில் போட்டுள்ளது!

70பார்த்தது
சூலூர், கிட்டாம் பாளையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். எம். ஜி‌. ஆர் மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு கிடைத்திருக்கும் என தெரிவித்த அவர், இலங்கையில் இன்றும் பிரபாகரன் வீட்டுக்கு அருகே எம். ஜி‌. ஆருக்கு சிலை அமைத்து தமிழ் மக்கள் மரியாதை செலுத்தி வருவதாக தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு கோவை மாநகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத நிலையில் உருவாக்கி இருக்கிறோம் என பேசிய முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாராக என சவால் விடுத்தார். ஆனைமலை நல்லாறு திட்டம் உள்பட அனைத்து கோவையின் திட்டங்களையும் கிடப்பில் போட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றம் சாட்டி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி